English Tamil Malay

அகல்யா
மத்திய செபராங் பிறை, அக் 12 –
பினாங்கு மாநில மஇகா இளைஞர் தலைவர்களில் துடிப்பான இளைஞரும், சிறந்த சேவகருமான கோபிநாத் நாகராஜன் பெர்மாத்தாங் பாவ் இளைஞர் தலைவர் தேர்தலில் போடியின்றி வெற்றிப் பெற்றார்.

அவருடன் இளைஞர் பகுதி துணை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தினாஷ் போட்டி இன்றியே தேர்வுப் பெற்றதாக கோபிநாத் கூறினார்.

தன்னுடைய தந்தையார் திரு. நாகராஜன் மஇகா பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பல்வேறு பிரிவில் சேவையாற்றி சிறந்த தலைவராக வீட்டிருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது. தனது நந்தையின் வழி, தாமும் மஇகாவில் சேவையாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் திரு.கோபிநாத் மஇகா இளைஞர் பிரிவில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள மஇகா 13 தொகுதிக்கும் இளைஞர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வுப் பெற்றனர்.

காட்சியில் புதிய தலைமுறை அதிகம் அங்கம் வகிக்க வேண்டும், மஇகா மீண்டும் ஒரு வலுவான மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் விருப்பத்தின் பேரில் பினாங்கு மாநிலத்தில் அனைத்து தொகுதியிலும் இளைஞர் தலைவர்கள் போட்டியின்றி தேர்வுப் பெற்றதாக பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கு போட்டி இன்றி தெர்வுப் பெற்ற கோபிநாத் நாகராஜன் கூறினார்.

மஇகாவின் தேசியத் தலைவர் துணைத்தலைவர், மற்றும் பினாங்கு மாநிலத் தலைவரின் விருப்பம் போல்,கட்சிக்கு புதிய தெம்பூட்டும் வகையில் புதிய இளைஞர் தலைவர்கள் சேவையாற்றுவார்கள் என்று கோபிநாத் நம்பிக்கைத் தெரிவிற்றார்.

பினாங்கு மாநிலம் முழுதும் நடந்த இளைஞர் அணி தேர்தலில், மத்திய செபராங் பிறை, பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கு நடந்த வேட்பு மனு தாக்கலில் கோபிநாத் நாகராஜன் தலைவராகவும், தினாஷ் இருவரும் முறையே தலைவர் துணைத்தலைவர் பொருப்புக்கு போடியின்றி வெற்றிப் பெற்றனர் .

 102 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *