English Tamil Malay

புத்ரா ஜெயா அக் 10
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு பெரியவர்கள் நாளை முதல் மாநிலங்களுக்கிடையிலான பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்தார்.

நாட்டில் தற்போது 90 விழுக்காடு பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி எழுதப்பட்டுள்ளதால் அரசாங்கம் மாநிலங்களுக்கிடையிலான பயண தடையை அகற்றுவதாக இன்று தொலைக்காட்சியில் நேரடி உரையில் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் மலேசியர்கள் இனிமேல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
கடந்த ஜனவரி முதல் முதல்முறையாக போலீஸ் அனுமதியின்றி மாநிலங்களுக்கிடையிலான பயணத்திற்கு மலேசியர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிட் 19 தாக்கம் தொடங்கியது முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய மலேசியர்களுக்கு தடை விதிக்கப் பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து தங்களுடைய பெற்றோர்களை சென்று காணவும் மற்றும் விடுமுறைக்கு செல்லவும் மனிதர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் அனைத்து எஸ்ஒபி நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டியது மலேசியர்களின் கடமையாகும் என்றார் அவர்.

 254 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *