English Tamil Malay

பினாங்கு அக்9கடந்த 13 ஆண்டுகளாக பினாங்கு இந்துக்களுக்கும், பினாங்கிலுள்ள இந்து ஆலயங்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், அதன் தலைவைருமான பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப .இராமசாமி, அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன் மற்றும் அவர்தம் குழுவினர்களின் சேவைகள் பாரட்டுக்குரியது என மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பினாங்கு அருள்நிலையம் தலைவருமான ந,தனபாலன் புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், சமீபத்தில் மாநில அரசாங்கத்தின் உதவியுடன் மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு, B40 குடும்பத்தைச் சேர்ந்த நமது தமிழ் மாணவர்களுக்கு உதவும் வகையில் கையடக்க கணிணி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் உன்னத நோக்கம் நமது மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பது மட்டுமே. வழங்கப்பட்ட கருவிகளில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்து கொள்ள வாய்ப்புக்கள் நிச்சயமாக உண்டு. அதனை விடுத்து முற்றாக இந்த திட்டத்தில் குறைகாண்பதால் எவ்வித நன்மையும் நாம் பெறமுடியாது. ஆனால் தற்போது மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் இந்து அறப்பணி வாரியத்தை மேற்கண்ட விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி ஊடகங்களிலும், தகவல் சாதனங்களிலும் தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுவருவதைக் கண்டு மிகவும் வருந்துவதாக ந.தனபாலன் கூறினார். இவ்வேளையில் மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஏற்பட்டுள்ள சமுதாயத்திற்கு நன்மையான பல விசயங்களை நாம் நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

2008ஆம் ஆண்டிற்குப்பிறகு பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் ஏதும் உடைக்கப்படவில்லை என்பது மிகவும் பெருமைக்குரிய விசயம் என்றும் வரலாற்று சிறப்புக்குரியது என்றும் தனபாலன் குறிப்பிட்டார் .

அதே வேளையில் பினாங்கு மாநிலத்தில் நிலப் பிரச்சனைகளை எதிர் நோக்கும் ஆலயங்களுக்கு சென்று நிலங்களை பெற்று தருவது அல்லது தற்காத்து தருவது போன்ற பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருவதாக அவர் மேலும் கூறினார். பினாங்கு வாழ் இந்து மக்களுக்கு மட்டுமின்றி மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பாக தன்னலமற்ற சேவையை ஆற்றி வருகின்றார் என்றும் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு இந்து ஆலயங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றார். நம் இந்திய மாணவர்களுக்கு கல்வித் துறையில் ஊக்குவிப்பு தொகை தருவது பாராட்டுக்குரியதாகும். குறிப்பாக பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகளுக்கும், அதன் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பாடுப்பட்டவர் என்ற பெருமை இவரையே சாரும் .

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக மாண்புமிகு பேராசிரியரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான டத்தோ எம் இராமச்சந்திரன் அவர்களும் நம் சமுதாயத்திற்கு ஆற்றிவரும் தொண்டு போற்றுதற்குரியது என்று தனபாலன் நந்த குமார் பாராட்டினார். அதுமட்டுமின்றி பினாங்கு இந்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்து மயானங்கள் பராமரிப்பது, நிலங்களை பாதுகாப்பது, ஆலயங்களை மக்களுக்கும் நன்மை தரும் தலமாகவும், ஆலய மண்டபங்கள் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் இடமாகவும், வசதி குறைந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு குறிப்பாக பி 40 குடும்பத்திலிருந்து வரும் பெண்களுக்கு கைதொழில் பயிற்சிகள் மட்டுமின்றி மாணவர்களுக்கு மேற்கல்விக்கும் பினாங்கு இந்து அறப்பணியால் இயன்ற வகையில் மடி கணிணிகள் உதவிகள் ,நிதி உதவிகள் என பல வகையில் உதவிகளை வழங்கி வருகின்றனர் .அதுமட்டுமின்றி மாநிலத்திலுள்ள கள்ளு கடைகளை தங்களது உருமாற்றம் திட்டத்தினால் இந்திய சமுதாயம் பயன் பெரும் வகையில் சிறார் பாதுகாப்பு மையம் ,சிறு தொழில் வியாபாரிகளுக்கு வியாபார வாய்ப்பு ஏற்படுத்தபடுத்தியுள்ளனர்.

பினாங்கு மாநிலத்தில் பன்னெடும் காலமாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் செயல்பட்டு வந்திருந்தாலும் 2008 ஆட்சிக்கு பின்னர் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சொத்துக்களை மீட்டனர் என்பதைவிட அதற்குரிய சொத்துக்களை பாதுகாப்பு செய்து வைத்துள்ளனர். மேலும் நமது கலை கலாச்சரங்களை பாதுகாக்கும் வகையில் பினாங்கு மாநிலத்தின் தமிழர்களின் கைவண்ணத்தையும் கலை கலாச்சார பண்பாடு கூறுகளை பறைசாற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் தொல் பொருள் அருங்காட்சியகமும் அமைத்து பினாங்கு சிறப்பிடம் பெற்று திகழ்கின்றது. பினாங்கு மாநிலத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது. அதன் பயன் என்ன என்பதும், நம் இந்தியர்கள் அதன் வழி எவ்வாறு பயன் பெற்று வருகின்றார்கள் என்பதும் கண்கூடாக அனைவரும் பார்த்து வருவது மட்டுமின்றி, இந்த வாரியத்தால் மக்கள் பெரும் அளவில் பயன் பெற்று வருகின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

தனபாலன் நந்தகுமார்
தேசிய இளைஞர் பகுதி தலைவர்,
பினாங்கு அருள்நிலையம் தலைவர்
மலேசிய இந்துதர்ம மாமன்றம்

 242 total views,  2 views today

One thought on “இந்துக்களின் ஆலயங்களுக்கும் இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சேவை போற்றத்தக்கது”
  1. பேராசிரியர் டாக்டர் இராமசாமி தலைமைத்துவத்தின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது.
    இந்துக்களின் நலனுக்காகவும்
    தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் இந்த அறப்பணி வாரியம் பல்லாண்டு காலமாக தொண்டாற்றி வருகிறது.
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *