English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் அக் 8
ஜசெகவில் உள்ள இந்திய தலைவர்கள் தலையாட்டி பொம்மைகள் அல்லது கங்காணிகள் அல்ல என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி தெளிவுபடுத்தினார்.

ஜசெகவில் தேசிய அளவில் பிரபல இந்திய தலைவர்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜசெகவில் உள்ள இந்திய தலைவர்கள் தலையாட்டி பொம்மைகளாக அல்லது கங்காணிகளாக இருந்து வருவதாக கடந்த அக்டோபர் 5, 6 ஆம் தேதிகளில் எப்எம்டி இணைதளத்தில் ஏ.அலி என்பவர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அவர் கருத்துரைத்தார்.

ஜசெக ஒரு இனவாத கட்சி அல்ல.மஇகா அல்லது இதர சிறிய இந்திய கட்சிகள் போல் அல்லாமல், ஜசெகவில் இந்திய தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய முன்னணியில் தான் மஇகா,மசீச மற்றும் கெராக்கான் கட்சிகள் அம்னோவிற்கு அடிமையாக இருந்து வருவதாக அவர் சாடினார்.

ஜசெகவை வழிநடத்தி வரும் அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், கட்சியில் அனைத்து இனங்களுக்கும் முன்னுரிமை வழங்கிவருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜசெக ஒரு வலிமையான கட்சி என்பதை கிட் சியாங் கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் இணைந்து ஐந்து மாநிலங்களை கைப்பற்றினோம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு 14வது பொதுத்தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைந்து மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினோம்.

துன் மகாதீர் மற்றும் சில பெர்சாத்து தலைவர்கள் சதி நாச வேலை செய்யாமலிருந்தால் இன்று மத்திய அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடித்திருக்கும் என ராமசாமி குறிப்பிட்டார்.

 221 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *