English Tamil Malay

கோலாலம்பூர் அக் 6 நாட்டில் கல்வித் துறையில் இனப்பாகுபாடு மோசமடைந்து வருவதாக பாக்காத்தான் ஹராப்பான் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் கூறினார்.

இதன் காரணமாக இன பாகுபாட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அவர் பேசினார்.
கல்வித் துறையில் இந்த இன பாகுபாடு தற்போது நாம் எதிர்நோக்கி வரும் கோவிட் 19 தொற்றை விட மோசமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் ஒரு அரசு சார்பற்ற அமைப்பு 2441 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது.
இவற்றில் 87 விழுக்காட்டினர் இனப்பாகுபாடிற்கு ஆளாகியுள்ளனர். 69 % காட்டினார் தோல் நிற பாகுபாட்டிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் 74 விழுக்காடு ஆசிரியர்கள் இனப்பாகுபாடு காரணமாக இருந்துள்ளதாக புள்ளி விவரம் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் இந்திய சமூகத்தினர் இனப்பாகுபாடிற்கு பலியாகி வருகின்றனர்.

குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்திய சமூகத்திற்கு எதிராக பகடிவதை மற்றும் இனப்பாகுபாடு மோசமடைந்து வருவதை அரசாங்கம் உணர வேண்டும்.
இந்த நவீன காலத்தில் இந்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நீடித்து வருவது வேதனை தருவதாக அவர் சொன்னார்.

இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு மற்றும் ஒற்றுமை துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபாகரன் வலியுறுத்தினார்.

 84 total views,  2 views today

One thought on “கல்வித் துறையில் இனப்பாகுபாடு மோசமடைந்து வருகிறது”
  1. I concur with Batu MP Prabakaran that racism is on the rise especially affecting our Indian students. The ministry of education with the intention of improving Malaysia’s education system from pre-school to post secondary education developed the Malaysia Education Blueprint 2013 – 2025. It was formulated for a sustainable transformation of the country’s education system. Though the target set in MEB serms amnitious, and achievable but what Prabakaran has said need to be looked into. The national unity is one of the objectives of national education but the government practice discriminative policies which defeats the objective.
    Also our national education has been subjective to political and administrative involments.
    The teachers should learn to accept plurality, respect the differences among the various ethnic students.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *