English Tamil Malay

மலாக்கா அக் 5
மலாக்கா சட்டமன்றத்தை மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் கலைத்து விட்டதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ அப்துல் ராவ்ப் யூசோ கூறினார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் 60 நாட்களுக்குள் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றார் அவர்.

மாநில தலைமைத்துவத்திற்கான தங்களின் ஆதரவை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதாக பதவியிலிருந்து விலகிச் செல்லும் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று அம்னோவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 1 பெர்சாத்து 1சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சருக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்தது.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *