English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா அக் 5
சொக்சோ காப்புறுதி சலுகை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.

வேலை செய்பவர்களுக்கும் மற்றும் வேலை செய்யாதவர்களுக்கு இந்த சொக்சோ காப்புறுதி சலுகை அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

தாம் மனிதவள அமைச்சராக இருந்தபோது இந்த பரிந்துரையை கொண்டு வந்ததாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

வேலை செய்பவர்களுக்கு இது பிரச்சனை அல்ல. காரணம் அவர்களுக்கு தனியார் காப்புறுதி உண்டு.
ஆனால் வேலை செய்யாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எந்தவித பாதுகாப்பும் மற்றும் சலுகையும் இல்லை.

இந்த நிலையில் இவர்களுக்கு சொக்சோ பாதுகாப்பு மிக அவசியமாகும்.
குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் கிடையாது.

தனித்து வாழும் தாய்மார்களுக்கு சொக்சோ பாதுகாப்பு வழங்கப்படும் என அண்மையில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனின் அறிக்கை வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
வெளிநாடுகளில் அனைவருக்கும் இதுபோன்ற பாதுகாப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக குலா சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில் சொக்சோ ஓய்வூ ஊதியத்தை அரசாங்கம் உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 26 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *