English Tamil Malay

பெக்கோக் அக் 5
வறுமைக் கோட்டில் வாழும் பி40 பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராம கிருஷ்ணன் வழங்கினார்.

கோவிட் 19 தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து இந்த குடும்பங்கள் தவித்து வருவதாக ராம கிருஷ்ணன் கூறினார்.
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமது தொகுதி மக்களுக்கு தாம் தொடர்ந்து உதவி வருவதாக முன்னாள் ஜொகூர் ஆட்சி குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

ஜொகூர் மாநில அரசாங்கம் இது போன்ற குடும்பங்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோவிட் 19 தாக்கத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ள மக்களுக்கு உதவ மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *