English Tamil Malay

முதலமைச்சருக்கான ஆதரவை 4 மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டது தொடர்ந்தது, மாநிலத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்ந்த விட்டதாக கூறப்படுகிறது.

மாநிலத்தை வழிநடத்துவதில் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி மீது தாங்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக அந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

டத்தோ இட்ரிஸ் ஹாரோன் (சுங்கை ஊடாங்-தேமு), டத்தோ நோர் அஸ்மான்(பந்தாய் குன்டோங்-தேமு), டத்தோ நூர்ஹிசாம்(பெங்காலான் பத்து-சுயேட்சை),டத்தோ நூர் எப்பான்டி-தெலுக் மாஸ்-பெட்சாத்து) ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினர்.

இந்த நால்வர் தங்களின் ஆதரவை மீட்டுக்கொண்டு தொடர்ந்து, மாநில முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்து விட்டதாக நம்பப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மலாக்காவில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மாநில அரசாங்கத்தின் அமைக்கும் பணி எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில சட்டமன்றத்தில் பாக்காத்தான் ஹராப்பான் 11 இடங்களை கொண்டுள்ளது.


இந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாக்காத்தான் ஹராப்பானின் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் மலாக்கா மாநில ஆளுநர் முகமட் அலி ருஸ்தாமுடன் சந்திப்பு நடத்த முயற்சித்து வருவதாக நம்பப்படுகிறது.

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *