English Tamil Malay

புக்கிட் மெர்த்தாஜம், அக் 04 –
நாட்டிலுள்ள முஸ்லிம்களை இந்துக்களும் பௌத்த சமயத்தினர் கொலை செய்ய காத்திருப்பதாகக் காணொளி ஒன்றில் சர்ச்சையாக ஏற்படுத்தியுள்ள உஸ்தாஸ் ஷாக்கிர் நாசோஹாவை போலீசார் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போலீஸ் புகார் அளித்தானர்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பினாங்கு கிளைத் தலைவர் ச.வேலாயுதம் ஒருங்கிணைப்பில் பினாங்கு முழுவதும் உள்ள உள்ள போலீஸ் நிலையத்தில் பொது அமைப்புகள் புகார் அளித்துள்ளதாக வேலாயுதம் கூறினார். அந்த முஸ்லிம் மத போதகர் வெளியிட்ட காணொளி மூலம் நாட்டில் இன பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள உஸ்தாஸ் ஷாக்கிருக்கு எதிராகக் காலதாமதம் செய்யாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அமைப்புகளின் சார்பில் ச.வேலாயுதம் விவரித்தார். பினாங்கு மாநிலத்தில் அளிக்கப்பட்ட புகாரில் பினாங்கு இந்து சங்கமும் இணைந்து தங்களிடம் அதிருப்தியை வெளிக்கொணர்ந்தனர். அவர் கூருகையில் உஸ்தாஸ் ஷாக்கிரைப் போன்ற மதவாதிகள் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு மிரட்டலாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்துக்கள் மற்றும் பௌத்த மதத்தினருக்கு எதிரான இவரின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதால் போலீசார் இவரை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் போலீஸ் புகார் அளித்த அமைப்பினர் கூறினர். பாகிஸ்தான் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்கள்தான் கொலை செய்து வருவதாக உஸ்தாஸ் ஷாக்கிரின் காணொளி உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களை எதிர்த்து வரும் இந்த இரண்டு இனத்தவருக்கு இந்நாட்டில் நாம் அடைக்கலம் கொடுத்து வருகிறோம் என அந்த காணொளியில் உஸ்தாஸ் ஷாக்கிர் கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டில் முஸ்லிம்கள், சீனர்கள், இந்தியர்கள், கடஸான் போன்ற இனத்தவர்கள் சகோதரத்துவ உணர்வுடன் அமைதியாக வாழ்ந்து வருவதாக போலிஸ் புகார் அளிக்க வருகை தந்த ச.உமாசுதன் குறிப்பிட்டார். இதுபோன்ற நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுச் சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பினாங்கு மாநில பொலீஸ் புகார் ஒருங்கிணைப்பாளர் ச.வேலாயுதம் குறிப்பிட்டார். உஸ்தாஸ் ஷாக்கிருக்கு எதிராக பினாங்கில் 80க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பினாங்கு மாநில இந்து சங்க பேரவை, மாநில இந்து தர்ம மாமன்றம், பினாங்கு இந்து இளைஞர் பேரவை, பொது இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடதகக்கது.

 20 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *