English Tamil Malay

மாசாய் அக் 3
இவ்வட்டாரத்தில் வறுமை நிலையை எதிர்நோக்கியுள்ள 20 குடும்பங்களுக்கு மாசாய் இந்திய சமூக நல மேம்பாட்டு கழகம் (மீவா) அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது.

சுமார் 100 வெள்ளி மதிப்புள்ள இந்த உணவு பொருட்கள் இக்குடும்பங்களின் சுமையை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக மீவா தலைவர் டத்தோ டாக்டர் புருஷோத்தமன் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 குடும்பங்களுக்கு மீவா இந்த அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 தாக்கத்தின் மூன்றாம் கட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 200 குடும்பங்களுக்கு மீவா உதவிப் பொருட்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தாக்கத்தை தொடர்ந்து பாசீர் கூடாங்,மாசாய்,பெலேன்தோங் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீவா உதவி வருவதாக அவர் சொன்னார்.

இதனிடையே தங்கள் இயக்கத்தின் இந்த சமூக பணிக்கு நன்கொடை வழங்கிய நல் உள்ளங்களுக்கு இவ்வேளையில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ புருஷோத்தமன் குறிப்பிட்டார்.

 28 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *