English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா அக் 1
அரசாங்கத்துடன் கையெழுத்திட்டுள்ள இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நன்மைகள் என்ன என்பதை பாக்காத்தான் ஹராப்பான் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என ஜசெகா பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

மக்களுக்கான 45 பில்லியன் உதவித்தொகை மற்றும் கோவிட் 19 மறுசீரமைப்பு திட்டம் போன்ற அரசாங்கம் கையாண்டுள்ள பரிந்துரைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சொன்னார்.
அதோடு கோவிட் 19 நிதியை 65 பில்லியன் வெள்ளி யிலிருந்து 110 பில்லியன் வெற்றியாக உயர்த்தும் பரிந்துரையை நீதி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சருமான அவர் சொன்னார்.

இந்த உதவித்தொகைகள் மக்களுக்கு சென்றடைய தேவையான சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உதவி புரியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட் 19 தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உதவித்தொகைகள் மக்களுக்கு விரைவில் சென்றடைய வேண்டும் என பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *