English Tamil Malay

lஊத்தான் மெலின்தாங் செப் 29
இவ்வட்டாரத்தில் வறுமையில் ஐந்து பேருக்கு பாகான் டத்தோ மஇகா தொகுதி தலைவர் டத்தோ சுப்பிரமணியம் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

தாமான் இஷாக்கை சேர்ந்த கிருஷ்ணம்மா, தாமான் ஸ்ரீ பெர்ணாம்மை சேர்ந்த கோவிந்தம்மா, பாகான் பாசீர் தோட்டத்தைச் சேர்ந்த கங்கையா, கம்போங் காமாட்சியை சேர்ந்த ஆதியம்மா மற்றும் தாமான் பாகான் பாசீரை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோருக்கு இந்த உதவி வழங்கப்பட்டது.

இவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பேம்பர்ஸ் வழங்கப்பட்டதாக டத்தோ சுப்பிரமணியம் கூறினார்.
ஊத்தான் மெலின்தாங் சட்டமன்ற அலுவலகத்தின் சார்பில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த வட்டாரத்தைச் சார்ந்த வசதி குறைந்த இந்திய சமூகத்திற்கு பாகான் டத்தோ மஇகா தொகுதி மற்றும் ஊத்தான் மெலின்தாங் சட்டமன்ற அலுவலகம் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்

 30 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *