English Tamil Malay

ஜொகூர் பாரு செப் 29
நாடு குழந்தைகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டுமென பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண ஒரு சரியான வழிமுறையை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்றார் அவர்.
காரணம் இதுபோன்ற குழந்தைகள் நாட்டின் எதிர்கால மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்ற முடியும் என முன்னாள் ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

மலேசியாவில் பிறந்த இந்த குழந்தைகள் நாடற்ற பிரஜை என்று பரிதாப நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் இதுபோன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் எதிர்காலம் இல்லாமல் இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது நீண்ட காலமாக நீடித்து வரும் ஒரு விவகாரமாகும். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடுமையான அவர் சொன்னார்.
இந்த பரிதாப நிலையை எதிர்நோக்கி வரும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார் அவர்.

அதேவேளையில் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இவர்களால் பங்காற்ற முடியும் என அவர் சொன்னார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நிச்சயம் வழிகள் உண்டு. அரசாங்கம் இந்த விவகாரத்தில் மனிதாபிமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

 46 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *