English Tamil Malay

.
ஜோர்ஜ்டவுன் செப் 29 – பினாங்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, மத்திய செபராங் பிறையில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனை நடவடிக்கையில் 36 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் ஒருவரைக் கைது செய்ததாகத்  தென்மேற்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்பிரின்டென்டன் கமாருல் ரீசால் ஜனால் கூறினார்.

செபராங் பிறையில் கைது செய்யப்பட்ட ஆடவரைத் தொடர்ந்து, பினாங்கு தென்மேற்கு மாவட்டத்தில் நடந்த அதிரடி பரிசோதனையில் மேலும் ஒரு ஆடவரை தென்மேற்கு மாவட்டத்தில்  கைது செய்யப்பட்டதில் 4.595 கிலோ கிராம் ஹெரோஹின் எனும் போதைப்பொருள் கையும் களவுமாகப் பரிமுதல் செய்யப்ட்டறு என்று சுப்பரிடென்டன் கமாருல் ரிசால் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.

பரிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 61, 573 வெள்ளியாகும் என்று கூறிய தென்மேற்கு காவல் துறைத் தலைவர் கைது செய்யப்பட்ட இரண்டு ஆடவர்களும் மேல் விசாரணைக்கு 7 நாட்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

22,975 பேர்கள் பயன் படுத்தக்கூடிய இந்த ஹெரோஹின் வகை போதைப் பொருள் முறியடிப்பு சம்பவம், பொது மக்கள் போதைப்பொருள் பயன் படுத்துவதிலிருந்து தடுத்துள்ள  காவல் துறையின் வெற்றியாகும் என்றும் தென்மேற்கு காவல் துறைத் தலைவர் சுப்பரிடென்டன் பாலிக் பூலாவ் காவல் நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களும் 1952 ஆண்டு அபாயகர போதைப்பொருள் செக்‌ஷன் 39பி தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

தென்மேற்கு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான விநியோகிப்பு மற்றும் கடத்தல் சம்பவங்களை மாவட்ட காவல் துறை விட்டுக்கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என சுப்பரிடென்டன் கமாருல் ரிசால் கூறினார்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *