English Tamil Malay

ஜோர்ஜ் டவுன் செப் 27
கடலடி சுரங்கப்பாதைக்கு பதிலாக மூன்றாவது பாலத்தை கட்டுவது குறித்து மாநில அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயாவ் கூறினார்.

தற்போது கடலடி சுரங்கப்பாதை மீதான ஆய்வறிக்கை ஒன்றை மேம்பாட்டாளர்கள் தயார் செய்துள்ளனர் என்றார் அவர்.
இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

இந்த கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து மாநில ஆட்சிக்குழு விரைவில் முடிவு செய்யும் என்றார் அவர்.
அதேவேளையில் மூன்றாவது பாலம் கட்டும் சாத்தியத்தை மாநில அரசாங்கம் மறுக்கவில்லை என்றார் அவர்.

இந்த மூன்றாவது பாடத்திட்டத்தை முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கடந்த 2016 இல் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பரிந்துரை செய்திருந்தார்.

 30 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *