English Tamil Malay

கோலாலம்பூர் செப் 27
தாம் நியூஸிலாந்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிகேஆர் பத்து எம் பி. பிரபாகரனுக்கு எதிராக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை துணை அமைச்சர் சந்தாரா அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி என். கிருஷ்ணன் நாயர் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வழக்கு மனுவை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த மார்ச் 17 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் பிரபாகரன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை தொடர்பாக இந்த அவதூறு வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.
அந்நாட்டின் சட்டங்களை மீறி இருந்தால் எட்மண்ட்

சந்தாராவை மலேசியாவிற்கு வெளியேற்றும் படி நியூசிலாந்து தூதரகத்தை கடந்த மார்ச் 17ஆம் தேதி பிரபாகரன் வலியுறுத்தினார்.
மேலும் நியூசிலாந்தில் நீண்ட நாட்களுக்கு தங்கியிருக்க எட்மண்ட் சந்தாரா எப்படி அனுமதிக்கப்பட்டார் என பிரபாகரன் வினவியிருந்தார்.

தமக்கு 55 நாள் விடுமுறை கிடைத்ததாகவும் கடந்த 2020 டிசம்பர் 24ம் தேதி முதல் நியூசிலாந்தில் தாம் தனிமைப்படுத்தப் பட்டதாக எட்மண்ட் விளக்கம் தந்துள்ளார்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *