English Tamil Malay

தெப்ராவ் செப் 26
மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து ஒத்துழைக்க இவ் வட்டாரத்தை சேர்ந்த இந்திய முஸ்லிம்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக தெப்ராவ் தொகுதி மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோ சுகு கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி மீது இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடக்க கட்டமாக இவ் வட்டாரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் இமுட்டி மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்னும் அதிகமான இந்திய முஸ்லிம்கள் மலேசிய மக்கள் சக்தி கட்சிகள் இணையக் கூடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தலைமையில் சிறப்பாக இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 98 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *