English Tamil Malay


கோலாலம்பூர் செப் 27
கோவிட் 19 தாக்க காலத்தில் நாட்டில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் திவால் ஆகிவிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
கடந்த 2020 ஜூலை முதல் 2021 ஜூலை வரை 10,317 பேர் திவால் ஆகிவிட்டதாக என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில் இதே காலகட்டத்தில் நாட்டில் 1,246 வர்த்தகங்கள் மூடப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று மக்களவையில் பாக்காத்தான் ஹராப்பான் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
2020 மற்றும் 2021 ல் எத்தனை துறைகள் மூடப்பட்டது என்பதை பட்டியலிடுமாறு லிம் வலியுறுத்தினார்.

அதேவேளையில் இந்த தாக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எந்த வகையில் உதவி உள்ளது என லிம் வினவினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர், வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு ஊக்குவிப்பு தொகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் தெரிவித்தார்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *