English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் செப் 27
குடும்ப கொள்கையை முதலில் நம் நாட்டில் அமல்படுத்துவதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி உறுதி செய்ய வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி வலியுறுத்தினார்.

பிரதமர் இந்த கொள்கையை உலகிற்கு உபதேசம் செய்வதைவிட இங்கே செய்ய வேண்டும் என்றார் அவர்.
மலேசியாவில் பல பாகுபாடு கொள்கைகள் அமலில் இருந்து வருகிறது. இதை சரி செய்துவிட்டு தான் உலகிற்கு உபதேசம் செய்ய வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.

இஸ்மாயில் சப்ரியின் குடும்ப கொள்கை சரியான ஒன்று. இருப்பினும் அந்த கொள்கை முதலில் இந்நாட்டில் அமலாக்கம் செய்வதை பிரதமர் உறுதி செய்வது சிறந்த ஒன்று என்றார் அவர்.
அதன்பிறகுதான் ஐக்கிய நாடுகளின் வழி இந்த கொள்கையை பிரதமர் உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.

உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான குடும்ப கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என நேற்று ஐநா சபையின் தொடக்க உரையில் இஸ்மாயில் வலியுறுத்தியிருந்தார்.

இது கட்சிகளுடன் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நாட்டில் சீர்திருத்தத்தை பிரதமர் கொண்டு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 24 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *