English Tamil Malay

கோலாலம்பூர், 25 செப்டம்பர் — கொவிட்-19 நோயுடன் வாழ பழகிக் கொள்வதற்கு தயாராகி, நாடு எண்டமிக் கட்டத்திற்குள் நுழையவிருப்பதைத் தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்வதிலும் மக்களுக்கு வழிகாட்டுவதிலும் சமூக மருந்துக உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

கொவிட்-19 நோயை எதிர்கொள்ளும் போராட்டத்தில், முக்கிய பாதுகாப்பு தரப்பினராகவும் நாட்டின் சுகாதார முறை பாதுகாவலர்களாகவும் விளங்கும் மருந்தக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, மிகவும் அவசியம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.

இன்று அனுசரிக்கப்படும் உலக மருந்தக உறுப்பினர்கள் தினத்தை முன்னிட்டு, மலேசிய சமூக மருந்தக சங்கம், MCPG ஏற்பாட்டில் நடைபெற்ற இயங்கலை வழியான நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்தபோது கைரி ஜமாலுடின் இவ்வாறு தெரிவித்தார்.

சுய பரிசோதனைக் கருவி வாங்குவதில், மருந்தகங்கள் சரியான இடமாக இருப்பதால், இதர சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன், இக்கருவி குறித்த விரிவாக தகவல்களை வழங்குவதில் சமூக மருந்தக உறுப்பினர்களின் கடமையும் மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சுய பரிசோதனைக் கருவியின் பயன்பாடு, அதைப் பாதுகாப்பாக வைப்பது மற்றும் வீசி எரியும் முறை குறித்து பொது மக்களுக்கு சமூக மருந்தக உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்கலாம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

 24 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *