English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம் செப் 25-மலாயா பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியை மேற்கொள்ளவிருக்கும்  மாணவி தர்ஷனா த/ பெ பால்ராஜ் அவர்களுக்கு மலேசிய இந்து சங்க அல்மா  வட்டார பேரவை கல்விப் பிரிவின்  வாயிலாக உதவித்  தொகை  வழங்கப்பட்டது. 

அல்மா தமிழ்ப்பள்ளியின் முன்னால் மாணவியான இவரின் தந்தை ஒரு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பி 40 குடும்பத்தைச் சார்ந்த இவரின் கல்விச் செலவிற்கு மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பேரவைத் தலைவர்,அல்மா வட்டார இந்து சங்க பொறுப்பாளர்கள் மற்றும் நல்லுள்ளங்கள் சிலரும் வழங்கிய நன்கொடைதனை   பினாங்கு மாநில இந்து சங்கத்  தலைவர் திரு மா.  முனியாண்டியுடன் அல்மா வட்டார இந்து சங்க வட்டார  தலைவர் திரு இரா.நவரசன், அல்மா இந்து சங்க வட்டார  கல்விப்பிரிவு தலைவர் திரு வீ.குணசேகரன்  மாணவி தர்ஷணாவிடம் ஒப்படைத்தார்.

தேவையறிந்து தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய இந்து சங்கத்திற்கு  மாணவியின் தந்தை திரு .பால்ராஜும் மற்றும் அவரின் குடும்பத்தினரும் நன் றி தெரிவித்துக்கொண்டனர்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *