English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் செப் 23-உள்நாட்டுச் சரக்கு பட்டுவாடா நிறுவனங்கள் 51 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமையை கொண்டிருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.

அரசாங்கத்தின் இந்த முடிவானது இந்த துறையில் பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களில் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக அமையும் என்றார் அவர்.வெளிநாட்டுச் சரக்கு பட்டுவாடா நிறுவனங்களுக்கு இந்த புதிய நிபந்தனை விதிக்கப்படவில்லை.
இந்த புதிய நிபந்தனை பாரபட்சமான ஒன்றாகும்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஏன் இந்த புதிய நிபந்தனை என்பதை அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.இதர நிறுவனங்களைப் போல் இந்த பட்டுவாடா நிறுவனங்களும் கோவிட் 19 தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்நிறுவனங்களுக்கு ஏன் புதிய நிபந்தனைகள் விதிக்கப்படவேண்டும் என அவர் வினவினார்.சுங்கத்துறை உரிமம் பெற இந்த நிறுவனங்கள் 51 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமை கொண்டிருக்க வேண்டுமென நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்த நிபந்தனைகள் இத்துறையில் ஈடுபட்டுள்ள பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களுக்குப் பல இடையூறுகள் ஏற்படும் என்றார் அவர்.ஆகையால் நிதி அமைச்சு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே தாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது இந்த பரிந்துரையைத் தாம் நிராகரித்து விட்டதாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *