English Tamil Malay

சிரம்பான் ஜெயா செப் 22
உடல் நல பாதிப்பு மற்றும் வறுமையில் அவதியுற்று வரும் இங்குள்ள ஒரு தம்பதியினருக்கு பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் உடனடியாக சென்று உதவி கரம் நீட்டினார்.

முகமட் ஜாக்கி முகமட் யூசோப் மற்றும் சுஷிலா சுலைமான் தம்பதியினருக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அவர் வழங்கினார்.
அதேவேளையில் உடல்நலப் பாதிப்பால் நடக்க இயலாத சுஷிலா சுலைமானுக்கு சக்கர நாற்காலி ஒன்றையும் அவர் அன்பளிப்பு செய்தார்.

இந்த உதவியானது அந்த குடும்பத்தின் சுமையை சற்று குறைக்கும் என தான் நம்புவதாக குணா குறிப்பிட்டார்.

சிரம்பான் ஜெயா தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு அவ்வப்போது தாம் உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *