English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா செப் 21
கோவிட் 19 தாக்க காலத்தில் நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை கொண்டு வருவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.

தற்போது நாட்டில் சுமார் 40 லட்சம் சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த சட்டவிரோத தொழிலாளர்களை சட்டபூர்வமான தொழிலாளர்களாக மாற்றி அமைத்தால் மட்டும் போதுமானது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

அதே வேளையில் நாட்டிலுள்ள தடுப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கான அந்நிய தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சரியான வழிமுறையின் வழி இந்த சட்டவிரோத தொழிலாளர்களை சட்டபூர்வ தொழிலாளர்களாக மாற்றி அமைக்க முடியும் என்றார் அவர்.

தடுப்பு முகாம்களிலுள்ள அந்நியத் தொழிலாளர்களை தங்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
காரணம் இவர்கள் பெரும்பாலான தொழிலாளர்கள் அனுபவமுள்ள ஆற்றல் மிக்க தொழிலாளர்கள்.
அதேவேளையில் நம் நாட்டு கலாச்சாரத்தை தெரிந்து கொண்டவர்கள்.

இவர்களை சட்டப்பூர்வ தொழிலாளர்களாக மாற்றியமைப்பதில் என்ன தவறு என அவர் வினவினார்
புதிதாக அந்நிய தொழிலாளர்களை கொண்டு வருவதால் ஏஜெண்டுகள் தான் அதிக லாபத்தை அடைகின்றன.
புதிதாக 32 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்களை கொண்டுவர தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 320 total views,  1 views today

One thought on “அந்நிய தொழிலாளர்களை கொண்டு வருவதை தடை செய்க”
  1. முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கூறுவது போல் 32 ஆயரம் அன்னிய தொழிளாளர்களை இறக்குமதி செய்ய விரும்பும் அரசாங்கத்தின் நோக்கம் தேவையற்ற ஒன்று. இதுபோன்ற செயல் ஏஜெண்டுகள் அதிக இலாபம்
    அடைய மட்டும் வழிவகுக்கும்.
    நாட்டில் இப்போது இருக்கும் சட்டவிரோத தொழிலாளர்களை சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கி வேலையில் அமர்த்தி கொள்வதால் தொழிலாளர் பற்றாகுறையை எளிதாக போக்கிவிடலாம்.

Leave a Reply to JM Purushotham Cancel reply

Your email address will not be published. Required fields are marked *