English Tamil Malay

ஜெலுபு செப் 19
இவ்வட்டாரத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் காய்கறிகளை பயிரிட சுங்கை ரோத்தானில் காலியாகி இருக்கும் டிஎன்பியின் நிலத்தைப் பெற விண்ணப்பிக்கப்படும் என பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.

விவசாயத்தில் ஆர்வமுள்ள மக்கள் தங்களின் கூடுதல் வருமானத்தைப் பெற இந்த நிலத்தில் காய்கறிகளை பயிரிட டின்பியின் அனுமதியை பெற தம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் ஜசெக தாமான் புக்கிட் கெம்பாஸ் கிளை தலைவர் மாரியம்மாவிற்கு சொந்தமான குளத்தில் மீன்களை வளர்க்க மீன் குஞ்சுகளை பெற தாம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிரம்பான் நகராண்மைக் கழக உதவியாளர் முகுந்தன், ஜெலுபு மாவட்ட மன்ற உறுப்பினர் பெருமாள், கன்போய் கிளைத் தலைவர் மூர்த்தி மற்றும் ஜுவாசே கிளைத் தலைவர் கிரோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 70 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *