English Tamil Malay

கிள்ளான் செப் 19
அரசாங்கத்துடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும் அரசாங்கத்தை குறை கூற பாக்காத்தான் ஹராப்பான் தயங்காது அந்தக் கூட்டணி 2 எம்பிக்கள் பெஜுவாங் அவை தலைவர் மகாதீருக்கு நினைவுறுத்தினர்.
எதிர்க்கட்சி கூட்டணியாக தனது பங்கை பாக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து ஆற்றிவரும் என ஜசெக கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ மற்றும் பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி பஃமி பட்சில் கூறினர்.

மத்திய அரசாங்கத்துடனான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெஜுவாங் கையெழுத்திடாது என இன்று மகாதீர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என லங்காவி எம்பியுமான மகாதீர் கூறியுள்ளார்.

வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் பாக்காத்தான் ஹராப்பான் முக்கிய பங்காற்றவிருப்பதாக அந்த எம்பிக்கள் குறிப்பிட்டனர்.
பட்ஜெட்டில் மனநிறைவு கொள்ளாவிட்டால் அதை எதிர்க்கட்சி கூட்டணி ஆதரிக்காது என அவர்கள் தெரிவித்தனர்.

ஆகையால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் இந்த சட்டம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என அவர்கள் தெளிவுபடுத்தினர்.
அரசாங்கத்துடனான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாக்காத்தான் ஹராப்பானின் தலைவர்கள் அண்மையில் கையெழுத்திட்டனர்.

 22 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *