English Tamil Malay

பட்டர்வொர்த் செப் 18-பன்னாட்டு புத்தாக்கப்,படைப்பாற்றல் தொழிற்நுட்பக் கண்காட்சி போட்டியில் தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி , பட்டர்வெர்த், பினாங்கைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் வென்றனர்.

அவர்கள் இதய துடிப்பறி கண்காணிப்பு அமைப்பு (IOT HEARTBEAT MONITARING SYSTEM )எனும் படைப்பை உருவாக்கி தங்கம் வென்றனர். தொடர்ந்து, MyRis Innovation Mentor Award-ன் வெள்ளி விருதை இப்பள்ளி தொழிற்நுட்ப ஆசிரியை குமாரி ஜெக்குலின் த/பெ மார்டின் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் தன்வீர் த/பெ சுகுமாறன், ஹரினி ராதா த/பெ கணேசன், சஞ்சிதா த/பெ விஜையானன், ஜணனி த/பெ பூபாலன், வசுந்தரா தபெ/ கண்ணையா ஆகிய ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பங்கெடுத்துச் சாதனை புரிந்திருப்பது பெருமையளிக்கிறது.

தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக syscore நிறுவனம் robotic, ardino, micro bit தொடர்பான பல வகுப்புகள் நடத்தி வருகின்றது. ஓர் ஆண்டு காலமாக இவ்வகுப்பில் பயின்று வரும் மாணவர்களின் சிறந்த படைப்பின் மூலம் இம்மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போட்டிக்குப் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இப்புத்தாக்கப் போட்டியின் படைப்புகளை உருவாக்குவதிலும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் syscore நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது.

இவ்வேளையில் அவர்களுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு யாலீஸ்வரன் தர்மலிங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.

பினாங்கு மாநில அரசின் மானியத்தின் வழி இத்தொழிற்நுட்ப வகுப்புகள் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளில் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடனும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் இவ்வ பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு யாலீஸ்வரன் தர்மலிங்கம் ஆதரவில் வகுப்புகள் இயங்கி வருகின்றன.


இத்தருணத்தில் பள்ளி மேலாளர் வாரிய செயலவை ,பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை ,பள்ளி முன்னாள் மாணவ சங்க செயலவை மற்றும் பெற்றோர்கள் இவ்வெற்றிக்கு ஊன்றுகோலாக இருந்த பினாங்கு மாநில அரசு, பினாங்கு மாநில துண முதல்வர் II மாண்புமிகு பேராசிரியர் முனைவர் இராமசாமி பழனிசாமி அவர்களுக்கும், பள்ளித் தலமையாசிரியர் திரு. குணசேகரன் நல்லதம்பி,பள்ளி பெர்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு த.யாலீஸ்வரன், syscore நிறுவனத்தினர், இப்பள்ளி தொழிற்நுட்ப ஆசிரியை குமாரி ஜெக்குலின் த/பெ மார்டின், மற்ற ஆசிரியர்கள் ,சாதனை படைத்த மாணவர்கள் அவர் தம் பெற்றோர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றனர்!

 58 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *