English Tamil Malay

ஆர்.தசரதன்

ஜோர்ஜ்டவுன் ஜன 27 நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்குச் சொந்தமான வெள்ளி இரதம் கோவில் வீட்டிலிருந்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் புறப்பட்டது.164 ஆண்டுக்காலமாக நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அரங்காவலர்களால் ஏற்று நடத்தபடும் ரத ஊர்வலத்துக்கு  புத்ரா ஜெயாவிலிருந்து சிறப்பு அனுமதியுடன் ,தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதலில்  வெள்ளி இரதம் பினாங்குநகர விதிகளில் செல்ல அனுமதி பெறப்பட்டதாக நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்  அறங்காவலர் டாக்டர் ஏ.நாராயணன் கூறினார்.

பினாங்கு மாநில அரசாங்கம் கோவிட்-19  தொற்று காரணமாகத் தைப்பூச விழா,ரத ஊர்வலம் மேலும் பல நடவடிக்கைகளுக்குத் தடை விதித்திருந்த வேளையில்,நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெற வேண்டும் எனக் கோரிக்கை மனுவை  மாநில அரசாங்கம் மற்றும் கூட்டரசு அரசாங்கத்திடம்  வழங்கிய நிலையில் நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி ரத ஊர்வலத்தை நடத்தலாம் எனக் கூட்டரசு அரசாங்கம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியது என மேலும் அவர் குறிப்பிட்டார்.

இது முதன்முறையாக ஹட்டன் லேன் வழியாகச் சென்று ஜாலான் டத்தோ கிராமட் சாலைக்கு பதிலாக மாகலிஸ்டர் சாலை வழியாகச் சென்றது. தேர் நிறுத்தப்பட்ட ஒரே நேரம் காளைகளை மாற்றுவதற்காக தான் என்று அவர் தெரிவித்தார்.

பினாங்கு நகர விதிகளில் காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் நேற்று காலை 6.6 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து காலை மணி 6.00 மணி அளவில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆலயமான   ஸ்ரீ  தண்டாயுதபாணி  ஆலயத்தில் வெள்ளி ரதம் வந்தடைந்தது.

பினாங்கு மாநிலத்தில் 127 ஆண்டுகளாக வெள்ளி ரதம்  வெள்ளோட்டம் கண்டுள்ளது என்பதுடன்,அதற்க்கு முந்தைய காலத்தில் 27 ஆண்டுகள் மரத்திலான மேடான் இந்தோனேசியாவில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் பினாங்கு விதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது எனும்  நீண்ட நெடிய பாரம்பரியத்தை இந்த  ரத ஊர்வலம் சிறப்புப் பெற்று சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.

10 நகரத்தார் பணியாளர்கள் மட்டுமே ரத ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன்,குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே ரதம் நிறுத்தப்பட்டு ரதத்தை  இழுக்கும் மாடுகளின் மற்ற ஜோடி மாடுகளை மாற்றி அமைக்க ரதம் அதற்காகவே நிறுத்தப்பட்டது.

இரதம் ஊர்வலமாக செல்லும்சாலைகளில்  ஓரங்களில் நிறுத்தப்பட்ட சில பக்தர்களின் வாகனங்கள் இருப்பதை  சமூக வலைத் தளங்களில் பரவிய காணொளிகளின் காட்சிகளின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்குக் காவல் துறையினர் கும்பல் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தி அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 46 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *