English Tamil Malay

குவாந்தான் செப் 16-
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் கொள்கைக்கு ஏற்ப ஒரு மலேசிய குடும்பமாக நாம் வாழ வேண்டும் என பகாங் மாநில சமூக ஆர்வலர் டத்தோ ர. சத்தியசீலன் மலேசிய வாழ்த்து செய்தியில் கூறினார்.

இந்நாட்டிலுள்ள பல இன மக்களுக்கிடையே இருந்து வரும் ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் தான் இன்று நாம் அடைந்துள்ள இந்த வெற்றிக்கு காரணம் என்றார் அவர்.

மலேசியா உதயமாகி 58 ஆண்டுகள் கடந்த போதிலும் இந்நாட்டில் பல இன மக்கள் புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாண்பை இன மற்றும் மத பாகுபாட்டை கொண்டு அரசியல்வாதிகள் சீரழித்து விடக் கூடாது என்றார் அவர்.

முஸ்லிம் அல்லாதவர்களின் மதங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஒரு சட்டம் வகுக்கப்பட வேண்டும் என ஒரு துணை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளது ஒரு வருத்தமான செய்தியாகும்.

கடந்து 1963 ஆம் ஆண்டில் சபா மற்றும் சரவாக் இணைந்து மலேசியா உதயமாகியது.

இந்த மலேசியா நாடு அனைத்து இனங்களுக்கும் சொந்தமாகும்.
இந்த நாட்டில் இன மற்றும் மத பாகுபாடு இருக்கக்கூடாது என்பதை அரசியல் தலைவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும் என தமது வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

 50 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *