English Tamil Malay

100 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

செய்தி ஆர்.தசரதன்


பினாங்கு ஜன 17- தமிழர்களின் கலாச்சார உன்னதம் கொண்ட பண்டிகை பொங்கல் விழா.மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படும் பொங்கல் முதல் நாளில் சூரிய பொங்கல் என்றும்,இரண்டாம் நாளில் உழவர்களுக்கு உறு துணையாக இருக்கும் பிராணியான மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல் என்றும் மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கண்ணியர்கள் கொண்டாடும் விழாவாக அமைத்தனர் நமது முன்னோர்கள்.

சிவபாலன் குடும்பதினர்

இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் விழாவினை பினாங்கு,பாயான் லெப்பாஸ் பகுதியில் உள்ள நீலம்பாள் ஆறுமுகம் வயது 80 அவர்களின் குடும்பத்தினர் கோலாகலமாகக் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர் மரபு தமக்கு உழைக்கும் கால் நடைகளைக் குறிப்பாக மாடுகளைச் சிறப்பித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது வழக்கமாகும்.
அவ்வகையில் நீலம்பாள் ஆறுமுகம் தமது குடும்பத்துடன் ஏற்பாடு செய்த மாட்டுப் பொங்கல் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.
மாட்டுக் கொம்புகளுக்குச் சாயம் பூசுவது,மாலை அணிவித்து,பட்டுத்தி மாடுகளை அலங்காரம் செய்து தயார்ப் படுத்துச் சிறப்பு பொங்கலிட்டு மாடுகளுக்கு உணவுதனை அளித்து நீலம்மபாள்  குடும்பத்தினர் மகிழ்ச்சியாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீலம்பாள் ஆறுமுகம்

இதனிடையே சிறப்பு வழிப்பாட்டு ஒன்றுக்கும் தங்களின் மாட்டுப் பண்ணையில்  குடும்பத்தில் மூத்த பெண்மணியாக இருக்கும் நீலம்பாள் ஆறுமுகம் கலந்துக்கொண்டு தனது குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி மாட்டுப்பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தார்.

ஆ.சிவபாலன்

தமிழ்நாட்டில் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருக்கும் போது தமது குடும்பத்தினர் பொங்கல் விழாவினை தங்களில் தோட்டத்தில் விழையும் கதிரை அனைத்து வீட்டின் வாசலில் சானத்தைக் கொண்டு அறுக்கப்பட் கதிரை வீட்டின் சுவரில் வைக்கப்பட்டு பிறகு புதுப்பானையில் பொங்கலிட்டுப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதாகத் தனது நினைவலைகளைத் தமிழ் மலரிடம் நீலம்பாள் விவரித்தார்.

தமது கணவர் ஆறுமுகம் தமது திருமணத்துக்குப் பின்னர் 10 மாடுகளைக் கொண்டு ஒரு மாட்டுப் பண்ணைய உருவாக்கினார் என்பதுடன் அவை 80 மாடுகள் வரை கொண்ட பண்ணையாக நிர்ரவாகித்தார் இதனால் தமது குடும்பம் பொருளாதார சிக்கலில்லாமல் தாங்கள் வசிக்கும் தற்போதைய பாயான் லெப்பாஸ் கிராமப் பகுதியில் சிறப்புடன் வாழ்ந்து வருவதாகத் திருமதி நீலம்பாள் கூறினார்.

தனது கணவருக்குப் பிறகு மாட்டுப் பண்ணையை இதுவரை தமது மகன்கள் நடத்தி வருவதுடன்,தமது பேரப்பிள்ளைகளும் மாடு வளர்க்கும் தொழிலை தொடர்ச்சியாக நடத்தி வருவதாகா திருவாட்டி நீலம்பாள் பெருமிதம் கொண்டார்.

மாட்டுப் பண்ணை வைத்திருப்பது லெச்சுமி கடாச்சாம் கொண்டவையாகத் தாம் கருதுவதாகவும் இதனால் மனமகிழ்ச்சி,பொருளாதார சிக்கல் இல்லாத சுப வாழ்க்கை நடத்த முடியும் எனத் திருமதி நீலம்மபாள் கூறினார்.
மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலம்பாள் பேத்தியான வர்ஷா சிவபாலன் வயது 18 குறிப்பிடுகையில்,தமது குடும்பத்தினர் மாட்டுப் பண்ணை வைத்திருப்பதால் பொங்கல் திருநாளைக் குறிப்பாக மாட்டுப் பொங்கல் தமது குடும்பத்தினர் மிக விமரிசையாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியான தருணம் எஈன்பதுடன் இதனால் தமது குடும்பத்தினர் ஒன்றிணைந்து கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

வர்ஷா சிவபாலன்

இளைய தலைமுறையினர் நமது பொங்கல் பண்டிகையை நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்று என்பதுடன்,நாம் பெருமை மிகு பாரம்பரிய பின்னணியைக் கொண்டவர்கள் அதில் நமக்காக உழவர்களின் நல்வாழ்வுக்கு உழைக்கும் மாடுகளுக்குச் சிறப்பிக்கும் பெரு விழாவாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை அறிந்து பல தலமுறைகளைத் தாண்டி இந்த மதச் சார்பற்ற தமிழர் கலாச்சாரமாக இதனைக் கொள்ள வேண்டும் எனக் குமாரி வர்ஷா சிவபாலன் தெரிவித்தார்.

மாட்டுப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த சிவபாலன் ஆறுமுகம் குறிப்பிடுகையில் மாட்டுப் பொங்கல் தங்களின் குடும்பத்தைப் பொருத்தவரை சிறப்பாக ஆண்டு தேறும் கொண்டாடப்படும் பண்டிகைதனை பாராம்மபரிம் மாறாமல் பல ஆண்டுகளைக தமது தந்தையார் காலம் தொட்டு தமது பிள்ளைகளும் இதனைக் கொண்டாடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆறுமுகம் படையாச்சி குடும்பம் தைப்பூச விழாவில் வது உலா செல்லும் வெள்ளி ரத்தினை மாடுகளைக் கொண்டு இழுக்கும் பாரம்பரிய குடும்பம் இதனைத் தனது தலைமையில் மற்றும் தனது மகன்களின் ஒத்துழைப்பில் தொடர்ந்து செய்யப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

 84 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *