English Tamil Malay

தைப்பிங் செப் 13சரியான நேரத்தில் தமது 500 வெள்ளி பிணை தொகையைச் சொல்லி விட்ட போதிலும் 46 வயதுடைய தனித்து வாழும் தாய் ஒருவர் காவல்துறையால் கைவிலங்கடப்பட்டு இரவு முழுதும் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் தமது நாய் அண்டை வீட்டார் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதற்காக சரோஜாதேவி கிருஷ்ணனுக்கு இந்த நிலை ஏற்பட்டது.தாம் ஜாமீன் தொகை செலுத்தி விட்டதாக தமது தாய் முறையிட்டும் இரவு முழுதும் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என சரோஜாதேவியின் புதல்வி ரங்கீதா  கோபி (வயது 22) கூறினார்.

பிணை  தொகையைச் செலுத்தியதற்கான ரசீதை தமது காண்பிக்க முயன்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த ரசீதைப் பார்க்கத் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அக்கறை கொண்ட மாஜிஸ்திரேட் அடிபா காதீரின் சரியான நேரத்  தலையீட்டினால் தமது தாயார் மறுநாள் விடுதலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அப்படி இல்லாவிட்டால் அன்று வார இறுதி என்பதால் தமது தாய் மேலும் 2 இரவுகள் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி அலட்சியப் போக்கிற்காக குற்றவியல் சட்டத்தின் 289 பிரிவின் கீழ் சரோஜாதேவிக்கு அடிபா 2000 அபராதம் விதித்தார்.இருப்பினும் சரோஜாதேவி முறையீட்டைத் தொடர்ந்து அந்த அபராதம் 500 வெளியாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

 90 total views,  2 views today

One thought on “பிணை தொகையைச் செலுத்தியும் இரவு முழுவதும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் தனித்து வாழும் தாய்.”
  1. பிணைப் பணத்தை செலுத்தியும் காவல்துறையினர்
    அவரை விடுவிக்காததூ காவல்துறை அதிகாரிகளின் அராஜகத்தை காட்டுகிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய விசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *