English Tamil Malay

பினாந்தி செப் 13- தென்,செபராங் பிறை மாவட்ட குற்றத் தடுப்பு அறவாரியம் ஏற்பாட்டில் பினாந்தி பகுதியில் உள்ள வரிய நிலையில் உள்ள 50 குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருளுதவி இன்று பினாந்தி ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் வழங்கப்பட்டது.

மக்களுக்கு உதவி பொருளுதவி வழங்கும் நிகழ்ச்சியில் செபராங் பிறை தென் மாவட்ட குற்றத் தடுப்பு அரவாரியத்தின் தலைவர் கெப்டன் பரமகுரு பாலன் @ ராம் தலைமையேற்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு கலை,கலாச்சார,சேவை நற்பணி மன்றம்,பினாந்தி ஸ்ரீ முத்து மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் பினாங்கு இந்து இளைஞர் பேரவை ஒத்துழைப்பில் நடந்தது.

மலாய்கார்கள் உட்பட் இந்திய வசதி குறைந்த 50  குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுக்குத் தேவையான பொருளுதவி வழங்கப்பட்டது.

இதுவரை மக்களுக்கான உதவி பொருளுதவி வழங்கும் திட்டத்திற்கு பினாங்கு மாநில அளவில் 950 உணவு குடைகள் வழங்கப்பட்டுள்ளது என பரமகுரு பாலன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு கலை,கலாச்சார,சேவை நற்பணி மன்ற தலைவர் பாலன் நம்பியார்,பினாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய தலைவர் சு.மணிவாசகம்,பினாங்கு இந்து இளைஞர் பேரவை தலைவர் கோமகன் லிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *