English Tamil Malay


பிறை செப் 11 -எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்குத் தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டியதாகவே நடைபெற்று வருகின்றன.

எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பிள்ளையாருக்கு உண்டு. உலகத்தில் பல நாடுகளில் பிள்ளையார் வழிபாடு காணப்படுகிறது.

அவ்வகையில் மலேசியத் திரு நாட்டில்,பினாங்கு தென் செபராங் முறை மாவட்டத்தில் விற்றிருந்து அருள் பலிக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு உட்பட்ட பிறை,ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை  காலை தொடக்கம் சிறப்பு யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் சிறப்பாக ஆலயத்தில் நடைபெற்ற வேலையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்த பெருமக்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

இதனிடையே விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூஜையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் உள்ளிட்ட அழைக்கப்பட்ட பிரமுகர்களுடன் பொது மக்களும் விநாயக சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டுக்கான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாகவும்,கோவிட் 19 கால கட்டமாக இருப்பதால் அரசாங்கம் விதித்துள்ள நிர்வாக நடமுறைகளைகுக்கு ஏற்ப விதிமுறைகள் யாவற்றையும் ஆலயத்திற்கு வருகையாக்கும் பக்தர்கள் யாவரும் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகப் பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ,மேஜர் காளீஸ்வரன் கூறினார்.

விநாயகர் வழிபாடு என்பது காலம் காலமாக நடைபெற்றுவரும் வழிபாடு என்பதுடன்,நமக்கு ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பதில் முழு முதல் கடவுளாக இருந்து தீர்ப்பவர் விநாயகர் என்பதற்கெர்ப நாட்டில் நிலவும் கோவிட்19 தொற்று படிப்படியாகக் குறைந்து நாடு மீண்டும் பொருளாதார வளர்ச்சி மீீீச்சி பெற்று மக்கள் சுபிச்சமாக வாழ அனைவரும் பிரத்தனை செய்வோம் என பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் குறிப்பிட்டார்.

டத்தோ,மேஜர்.காளீஸ்வரன்

பினாங்கு செபராங் பிறை மாவட்டத்தில் பிறை,ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தானம் மாநில  இந்துக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஆலயமாகத் திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *