English Tamil Malay

ஆர்.தசரதன்

ஜோர்டவுன் ஜன் 12-பினாங்கு மாநில அரசாங்கம் தனியார் நிறுவன கூட்டு் முயற்சியில் பினாங்கு கொடி மலை பகுதியில் கேபள் கார் நிர்மாணிப்புக்குச் செய்ய அறிவிப்பைச் செய்தார் மாநில முதலமைச்சர் செள குவான் இயோவ்.இந்த கேபால் கார் திட்டம் 5 கோடி செலவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டு முயற்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தின் விண்ணப்பத்தை 13.1.2021 தொடக்கம் 24.5.2021க்குள் தங்களின் விண்ணப்பத்தை அளிக்குமாறு முதலமைச்சர் செள குவான் இயோவ் தெரிவித்தார்.

கூட்டரசு அரசாங்கம் பினாங்கு கொடி மலையில் கேபள் கார் திட்டத்துக்கான 100 மில்லியன் வெள்ளியைக் கொடுப்பதை நிறுத்திக்கொண்ட காரணத்தால் மாநில அரசாங்கம் தனியார் நிறுவன கூட்டு முயற்சியில் அத்திட்டத்தைத் தொடர் எண்ணம் கொண்டுள்ளதாக முதலமைச்சர் செள தெரிவித்தார்.

இயற்கை சூழ்நிலையைப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து,கொடி மலைப் பகுதியில் ஏற்படும் பொது போக்குவரத்து நிலையை போக்கவும் பொது மக்களுக்கு மாற்றுச் சேவையை கேபல் கார் மூலமாக வழங்கத் திட்டமிடப்பட்ட திட்டம் கிணற்றில் போடப்பட்ட கல்லாகி கனவுகள் யாவும் களைந்த நிலையில் மாநில அரசாங்கம் தனியார் நிறுவனத்தின் அத்திட்டத்தைக் கையில் எடுக்க முனைப்புக் காட்டுவதாக முதல்வர் செள விவரித்தார்.

கேபள் கார் திட்டம் இயற்கையைப் பாதுகாத்து,குறுகிய இடைவெளியில் எவ்விதப் பாதிப்பையும் எதிர் நோக்க வண்ணம் தேசிய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல அமைப்பு முறை இருக்கும் என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி உடன் கலந்துக்கொண்டார்.

 28 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *