English Tamil Malay

சிரம்பான் செப் 6
மந்திரி பெசாரும் தங்களின் மாநில தலைவருமான டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனை அகற்ற நெகிரி செம்பிலானை சேர்ந்த சில பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது.

இருப்பினும் இவர்களில் பெரும்பாலோருக்கு கிளை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் அமினுடினை அகற்றும் முயற்சிகள் வெற்றி பெறாது என தம்மை அடையாளம் கூறிக் கொள்ள விரும்பாத பிகேஆர் தலைவர் ஒருவர் கூறினார்.

பெரும்பாலான கிளை உறுப்பினர்கள் அமினுடின் தொடர்ந்து மாநில மந்திரி பெசாராக நீடிப்பதை விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் செரட்டன் நகர்வின் போது பிகேஆரிலிருந்து விலகி பெர்சத்துவில் இணைந்த சில முன்னால் தலைவர்கள் இந்த சதித் திட்டத்திற்கு பின்னணியாக இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 28 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *