English Tamil Malay

நிபோங் திபால் செப் 6
ஜாவி சட்டமன்ற தொகுதியில் வறுமையில் உள்ள 20 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் நிபோங் திபால் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.

சங்காட் தோட்டத்தில் 10 குடும்பங்களுக்கும், தாமான் சென்ராவசியில் ஐந்து குடும்பங்களுக்கும், தாமான் டேசா ஜாவியில் நான்கு குடும்பங்களுக்கும் மற்றும் தாமான் மெர்பாவில் ஒரு குடும்பத்திற்கும் இந்த அத்தியாவசிய உணவு பொருட்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

டேசா ஜாவி அம்னோ கிளையின் இளைஞர் பிரிவு தலைவர் முகமட் ரிட்சுவான் மற்றும் தாமான் சென்ராவாசி அம்னோ மகளிர் அணி தலைவி சீமா மிகவும் உறுதுணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.


அதேவேளையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் நிபோங் திபால் தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் விஷ்வா மற்றும் கம்போங் ஜாவி தலைவர் கோவின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

 312 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *