English Tamil Malay


தாசேக் கெளுகோர் செ 5-சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லம் திரும்பிய சமூக சேவையாளர் டத்தோ அ.செளந்தராஜன் அவர்களின் இல்லத்தில் பினாங்கு மாநில  சமூக இயக்கங்களின் தலைவர்கள் சென்று கண்டனர்.

இந்த சந்திப்புக்கு  தலைமையேற்றார் பிறை,ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் உதவித் தலைவரான வீரையா அவர்கள்,

அவருடன் இந்த சந்திப்பில் உடன் வட மலேசியப் பத்திரிக்கை சங்கத் தலைவர் செல்வம் சடையன் மற்றும் பினாங்கு  அன்புக் கரங்கள் இயக்க மகளிர் தலைவியான இரஞ்சித மலர் ஆகியோர் கலந்துக்கொண்டார்.

டத்தோ செளந்தராஜன் மக்களுக்கு உதவிடும் வகையில் பல நல்ல காரியங்களுக்கு உநஙிகளை வழங்கி ஆதரித்தவர், அவர் விரைவில் பூரணமாக குணமாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும் என  டத்தோ செளந்தராஜனுடனான சந்திப்பின் கலந்துக்கொண்ட  வீரையா,செல்வம் சடையன் மற்றும் இரஞ்சித மலர் தங்களின் நம்பிக்கையைத் தெரிவித்தனர்.

மக்களின் சக தோழராக மக்களுக்கு உதவிடும் மனப்பான்மை கொண்ட டத்தோ செளந்தராஜன் விரைவில் பூரண குணமாக வேண்டுமென அலை ஒளி ஊடகமும் இதன் வழி தங்களின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் விருப்பம் கொள்கிறது.

 78 total views,  2 views today

One thought on “டத்தோ செளந்தராஜன் பூரண குணமடைய சமூகத் தலைவர்கள் வாழ்த்து.”
  1. டத்தோ செளந்தராஜன் அவர்கள் நல்ல முறையில் உடல்நலம் தேறி மீண்டும் தனது சமூக சேவையை தொடர்ந்து ஆற்றிட எல்லாவல்ல இறைவன் ஆசீர்வாதம் வழங்குவார் என பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *