English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் செப் 5-அமைச்சர் அந்தஸ்தில் தேசிய மறுமீட்சி மன்றத்தின் தலைவராக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் நியமனம் அதிர்ச்சியளிப்பதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.

17 மாதங்கள் ஒரு தோல்வியடைந்த அரசாங்கத்திற்கு தலைமையேற்ற ஒருவர் இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது ஏற்புடையதாக தெரியவில்லை என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் அணுகுமுறை விவேகமான ஒன்றல்ல எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு துரோகம் இழைத்தவர் முஹிடின்,தமது செரோட்டன் நகர்வின் வழி ஒரு ஜனநாயக அரசாங்கத்தை குழிதோண்டி புதைத்த  தவறை செய்தவர்  அந்த பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முஹிடின் யாசினின்.

பிரதமராக நீடிக்க வேண்டும் என்பதற்காக பேரரசருக்கு தவறுதலாக ஆலோசனை கூறி நாட்டில் அவசர காலத்தை கொண்டு வந்தவர் தான் முஹிடின் இவருக்கு இந்த புதிய அரசாங்கத்தில் அமைச்சர் அந்தஸ்தில்ஒரு பதவி வழங்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை தருவதாக ராமசாமி சுட்டிக்காட்டினார்.

முஹிடினின் 17 மாத ஆட்சிக்காலத்தில் நாட்டில் கோவிட் 19 தொற்று ஒழிந்தப் பாடில்லை. மாறாக இந்த தொற்று மோசமடைந்து ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர்.

இஸ்மாயில் சப்ரி தோல்வியடைந்த அரசாங்கத்தை சேர்ந்த தலைவர்களை கொண்டு தற்போதைய  அரசாங்கத்தை நடத்தி வருகிறார்,ஆகையால் தேசிய மறுமீட்சி மன்றத்தை வழிநடத்த ஒரு தகுதியற்ற தலைவர் முஹிடின் என பேராசிரியர் பி.ராமசாமி சாடினார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *