English Tamil Malay


ஜோர்ஜ்டவுன் செப் 3
மாநிலத்தில் கோவிட் 19 தொற்றை ஒழிக்க மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இம்மாதத்தில் பினாங்கிற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசி கிடைக்கப்பெறும் என மாநில முதலமைச்சர் சௌ குவான் இயாவ் கூறினார்.

இதன் முதல் கட்டமாக நாளை 2 லட்சம் தடுப்பூசிகள் வந்தடையும் என இன்று பினாங்கு சட்டமன்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து கோவிட் 19 தொற்றுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ள நிலைமை ஏற்படும் என அவர் சொன்னார்.

இருப்பினும் இந்த தொற்று மீண்டும் வருவதை தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் என்றார் அவர்.

ஞஇதனிடையே கோவிட் தாக்கத்தால் இவ்வாண்டில் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளதால், மத்திய அரசாங்கத்திடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு மாநில அரசாங்கம் கோரியுள்ளதாக அவர் சொன்னார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *