English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா செப் 1
சிலாங்கூர் அரசாங்கத்தில் வன மறுமேம்பாட்டு திட்டத்தை தேசிய நீர் சேவை வாரியத்தின் (ஸ்பான்) முன்னாள் ஆணையர் சார்ல்ஸ் சந்தியாகோ கடுமையாக சாடினார்.

கோலா லங்காட் வட வன பாதுகாப்பு நிலத்தை மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்துவதால் அதிக விளைவை எதிர்நோக்க வேண்டி வரும் என பாக்காத்தான் ஹராப்பான் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கோலா லங்காட் வட வன பாதுகாப்பு நிலத்தின் 536.7 ஹெக்டர் நிலம் தொகுப்பு பதிவிலிருந்து அகற்றப்பட்ட முடிவை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நீர் தேக்கம், பூமிக்கடியில் நீர் விநியோகம் மற்றும் வடிகால் திட்டங்களுக்கு வனப்பகுதி நிலங்கள் மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
தனது நீர் வழங்கல் தொடர்பாக சிலாங்கூர் ஏற்கனவே பல சவால்களை எதிர்நோக்கி வருகிறது.

நீர் தூய்மை கேட்டால் கிள்ளான் பள்ளத்தாக்கில் அடிக்கடி நீர் விநியோகம் துண்டிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அப்படி இருக்கையில் இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாட்டு திட்டத்தால் நிலைமை மேலும் மோசமடையும் என்றார் அவர்.
கோவிட் 19 தாக்கத்திற்கு பிறகு மீட்சி நிலைக்கு திரும்ப உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த விவகாரத்தில் சிலாங்கூர் முரண்பாடாக செயல்பட்டு வருவதாக இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சார்ல்ஸ் தெரிவித்தார்

.

 50 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *