English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம்  செ 2 பினாங்கு மாநில அன்புக் கரங்கள் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் புக்கிட் மெர்தாஜம், மத்திய மாவட்டம் பெர்மாத்தாங் திங்கி தாமான் தெகோ,ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் நலம் பெற சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜைக்கு மாநில அன்புக் கரங்கள் சமூக நல இயக்க தலைவர் கருணாகரன் தலைமையேற்றார்.

இந்த சிறப்புப் பூஜையில்  பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன்,தொழிலதிபர்,முனைவர் ஆர் குணசேகரன் பிள்ளை,பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் வேலாயுதம் உடன் பினாங்கு அன்புக் கரங்கள் இயக்க தலைவர் கருணாகரன்,செயலாளர் சோலமன் பொருளாளர் சுந்தர ராஜா மற்றும் செலவை உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோர் சிறப்புப் பூஜையில் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே வசதி குறைந்த பி40 100 பேருக்கு உணவுப் பொட்டலம் உடன் வழங்கப்பட்டதுடன்,சிறப்பாகச்  சேவை ஆற்றிவரும் டத்தோ மு.இராமசந்திரன் பூரணமாகக் குணமடைந்து மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் எனக் அன்புக் கரங்கள் சமூக நல இயக்கத்தின் தலைவர் கருணாகரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *