English Tamil Malay


ஜொஹோல் ஆக 31
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நெகிரி செம்பிலான், ஜொஹோலை சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஜெயம் நம்நாடு இயக்கம் உதவிப் பொருட்களை வழங்கியது.

மதிப்பிற்குரிய உன்டாங் லுவாக் ஜொஹோல் டத்தோ முகமட் அப்துல்லாவின் மூலம் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் கூறினார்.

20 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள், 6 சக்கர நாற்காலிகள், பேம்பர்ஸ, முதலுதவி சிகிச்சை சாதனங்கள் போன்றவை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இனப் பாகுபாடின்றி இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜெயம் நம் நாட்டின் சமூக சேவையை பாராட்டி டத்தோ ஹாஜி முகமட் சான்றிதழை டாக்டர் குமரேந்திரனுக்கு வழங்கினார்.
இதனிடையே கோவிட் 19 தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு தழுவிய நிலையில் ஜெயம் நம்நாட்டு குழுவினர் உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜெயம் நம் நாட்டில் இந்த சமூக பணிக்கு உதவ விரும்பும் பொதுமக்கள் ஜெயம் நம்நாடு இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

 60 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *