English Tamil Malay


கோலாலம்பூர் ஆக 31
அடுத்த வாரம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற கூட்டம் வரும் செப் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை செயலாளர் நிஸாம் மைடின் பட்ஷா மைடின் அனுப்பிய கடிதத்தில் இந்த ஒத்திவைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஒத்திவைப்பு காண காரணம் என்ன என்பது குறித்து எம்பிக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக அடுத்த மக்களவை கூட்டம் செப் 13 முதல் அக் 12 நடைபெற உள்ளது.

அடுத்த வாரம் நடைபெறவிருந்த மக்களவை கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

கோவிட் 19 நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பின் காரணமாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *