English Tamil Malay


கோலாலம்பூர் ஆக 30
பல இன மக்களுக்கிடையே இருந்து வந்த ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வின் காரணத்தால்தான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என கெராக்கான் தேசிய துணைத் தலைவர் ஓ தோங் கியோங் கூறினார்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க போராடிய சுதந்திர தந்தை துவாங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் இதர சுதந்திர போராட்ட வாதிகளை இவ்வேளையில் நாம் மறந்து விடக்கூடாது என தமது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் எட்டி இந்நாட்டில் பல இனங்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சுதந்திர தினத்தில் நாடு கோவிட் 19 என்ற புதிய மிரட்டலை சந்தித்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த கொடிய தொற்றால் நாம் பெரும் சவாலை எதிர் நோக்கி வருகிறோம்.
இந்த சவாலை சந்திக்க நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவிட் 19 தொற்றை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து வருகிறோம்.
இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற நாம் அனைவரும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதே நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது என பினாங்கு கெராக்கான் தலைவருமான அவர் சொன்னார்.

 54 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *