English Tamil Malay


நிபோங் திபால் ஆக 30
மக்கள் சக்தி கட்சி நிபோங் திபால் தொகுதியில் 2 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளது தொகுதியின் தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.
கம்போங் சேது மற்றும் கம்போங் ஆகிய கிளைகளின் உறுப்பினர்கள் பாரம் தம்மிடம் சமர்பிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த இரண்டு புதிய கிளைகள் அமைக்கப்பட்டது தொடர்ந்து நிபோங் திபால் தொகுதி வலிமை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கம்போங் ஜாவி மக்கள் நோக்கி வரும் பன்றி கொட்டகை பிரச்சினை குறித்து இங்குள்ள மக்களிடம் தாம் கண்டறிந்ததாக அவர் சொன்னார்.

இந்த விவகாரம் செபராங் பிராய் மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் தொகுதியின் உதவித் தலைவரும் தாமான் செருலிங் மாஸ் கிளைத் தலைவருமான சுகுமாரன், தொகுதியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷார்வின் மற்றும் கம்போங் சேது கிளைத் தலைவர் விஸ்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 80 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *