English Tamil Malay


ஜொகூர் பாரு ஆக 26
கோவிட் 19 தாக்கத்தால் வீழ்ச்சி அடைந்துள்ள ஜொகூர் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்கந்தார் மேம்பாட்டு கழகம் முக்கிய பங்காற்ற முடியும் என பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த தாக்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடிலிருந்து 3 விழுக்காடாக சரிவு கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 18 மாதங்களில் 6 முறை மாநிலத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் அதிகமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் மோசமடைந்துள்ளது மாநில பொருளாதாரத்தை மீட்சி நிலைக்கு கொண்டுவர இஸ்கந்தார் மேம்பாட்டு கழகம் முக்கிய பங்காற்ற முடியும் என முன்னாள் ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
இஸ்கந்தார் மலேசியாவில் 7.33 பில்லியன் வெள்ளி முதலீட்டு திட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்கந்தார் மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ இஸ்மாயில் இப்ராஹிமின் அறிக்கையை தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஜொகூரின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுபோன்ற நேரடி முதலீடுகள் அதிகமாக தேவைப்படுவதாக ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதனிடையே ஜொகூரில் இதுவரை 125881 கோவிட் 19 தொற்றுகள் பதிவாகி உள்ளதாகவும் 1727 மரணம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *