English Tamil Malay


நிபோங் திபால் ஆக 25
இங்கு தாமான் பெர்சத்துவில் கோவிட் 19 தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிரமத்தை எதிர்நோக்கி வரும் ஒரு குடும்பத்திற்கு நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சி உதவிக்கரம் நீட்டியது.

ஒரு அரசு சார்பற்ற அமைப்பு இந்த விவகாரம் குறித்து புகார் செய்ததை தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு அத்தியாவசியம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டதாக நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சியின் தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவ் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு தமது தொகுதியின் மக்கள் சக்தி தொடர்ந்து உதவி வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொகுதியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷார்வின் இந்த உதவித் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 68 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *