English Tamil Malay

சென்னை ஆக 17-பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் விஜேவுமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48

90களின் இறுதியில் தொலைகாட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைகாட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளால தொலைகாட்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் நேற்று நள்ளிரவில் காலமானார். அவருடைய மறைவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 181 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *