English Tamil Malay

ஆர்.தசரதன்

புக்கிட் மெர்தாஜாம டிச 27 திர்வரும் 2021 ஆம் ஆண்டை கல்வி ஆண்டாக பிரகடனம் செய்வதாக கூறிய பினாங்கு மாநில பேரவை தலைவர் கோமகன் லிங்கம்,10 புதிய இந்திய மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்புகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அண்மையில் மாச்சாங் பூபோக் பகுதியில் முதல் பிரத்தியோக வகுப்பு திறப்பு நிகழ்ச்சியில் தலைமை வகித்து பேசிய லி.கோமகன்,இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப்பள்ளியை சேர்ந்த கல்வியில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் கவனம் செலுத்துவத்துடன் அதற்கான செலவினங்கள் அனைத்தையும் மாநில இந்து இளைஞர் பேரவை பொருப்பு ஏற்க்கும் என தெரிவித்தார்.

பினாங்கூ தீவில் இரண்டு பிரத்தியோக வகுப்புகளும்,செபராங் பிறை மாவட்டங்களில் 8 பிரத்தியோக வகுப்புகள் திறக்கபடும் என கோமகன் விவரித்தார்.ஆல்மா பகுதியில் தொடங்கபட்ட பிரிதியோக வகுப்பிற்க்கு ஏற்பாட்டுக்குழு தலைவராக பினாங்கு இந்து இளைஞர் பேரவையின் உதவி தலைவர் சுகுணா ராமுலு பொறுப்பு வகித்தார் பொறுப்பு வகித்தார்.

பட்டர்வொர்த், அல்மா,தாசேக் கெளுகோர்,தெலுக் ஆயர் தாவார் ஆகிய பகுதியில் பிரத்தியோக வகுப்புகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் உடன் தன்னார்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தயாராக இருப்பதாக கோமகன் மேலும் விவரித்தார். 

இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ மு.இராமசந்திரன் கலந்தி்சிறப்பித்தார்.அவரின் சிறப்புரையில் பினாங்கு மாநில் இந்து இளைஞர் பேரவை கல்விக்கு முக்கியமளித்து இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியல் முக்கியம் அளித்து வருவது் பாராட்டுக்குறியது என்றும் இதற்கு இந்து அறப்பணி வாரியம் ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 10 வசதி குறைந்த மக்களுக்கான பொருளதவிகள் வழங்கபட்டது குறிப்பிடதக்கது என்பதுடன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு சேர்க்க சிறப்பு பிரமுகர்களாக கெப்டன் ராம்,ஏற்பாட்டுக்குழு தலைவராக பினாங்கு இந்து இளைஞர் பேரவையின் உதவி தலைவர் சுகுணா ராமுலு, பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் தலைவர் ஆ.ஜெயராமன்,மகிழ்ச்சி சமூக நல இயக்க தலைவர் சேகர் இராமையா உள்ளிட்ட மாநில இந்து இளைஞர் பேரவை மாநில பொருப்பாளர்கள் உடன் கலந்து சிறப்பித்தனர்.

 236 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *